RM Lakshmanan M.D
T.S No 3959, South 3rd Street, Pudukkottai
Email Id : contact@pettiyadi.com
Contact No. +91 93637 93337, 7373749990
We Nagarathars, left the footprints of business to the world. Our ancestors risked their lives in the ship to promote our business world wide and created a brand as "Thanavanigan". Nowadays we have lots and lots of transport and technology but many of us are shifted from business to work. Reason?
While thinking about the reason for this migration, we found "Pettiyadi" as a solution to support B2B and B2C.
"Pettiyadi" - *A Nagarathar's identity To reset and promote nagarathar brands.
Fear? Fear? Fear?
Why fear ? when we are here !
Who said Fear is known as
Forget Everything And Run?
Join us and we will show how to kick negative fear and turn that into positive fear.
Positive fear ???
Yeah
Face Everything And Rise
Let's Face Everything And Rise
செட்டிக்கப்பலுக்கு செந்தூரான் துணை என்று வேலை துணைக்கு அழைத்து பாய்மரக்கப்பலில் பயணம் செய்து, அயல் நாடுகளுக்கு சென்று, அங்கே சிறப்பாக வணிகம்செய்து, நாட்டாரின் குணம் அறிந்து, நல்லவரை, கெட்டவரை நயமாக பகுத்து உணர்ந்து, பாடுபடும் மக்களுக்கு பாங்காக பொருள் தந்து, அடக்கமாய் வாழ்ந்து, அதிகமாய் பொருள் ஈட்டி, நம் தேசத்தை மறவாமல் தாய் நாடு திரும்பி, தன் குடும்பத்திற்கு மட்டுமின்றி நாடு நலம்பெற பள்ளிக்கூடங்கள், கல்விச்சாலைகள் அமைத்து குளம் வெட்டி, கோவில் கட்டி வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள். ...
நடைபயிலும் காலத்திலேயே கொடைப்பழகிய சமூகம் என்று பெயர் பெற்றோம். இதெல்லாம் நம் அய்யாக்கள் போல வணிகம் செய்ததாலே சாத்தியமானது ஆகையால், "நாமும் அய்யாக்கள் போல், வணிகம் செய்வோம் உலகநாடுகள் எங்கும் சுவடுகள் பதிப்போம்.''
அன்று Risk எடுக்குறது எல்லாம் எங்களுக்கு Rusk சாப்பிடுற மாதிரினு பல வெளிநாடுகளுக்கு சென்றனர். அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து வசதி அதிகம் இல்லை தொலை தொடர்பு கொள்ளலாம். நாம் நினைத்தால் எந்த நாட்டுக்கு வேண்டும் என்றாலும் உடனடியாக சென்று விடலாம்.
இன்று Cellphone, Whatsapp மூலமாக ஒரு நொடியில் யாரைவேண்டும் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். நாம் வணிகம் செய்ய தயங்குகிறோம் ஏன்? ஒற்றை காரணம் தான் ''பயம்” நாம் மற்றவர்களிடம் கைகட்டி நம் திறமைகளை அவர்களிடம் அடகு வைத்து மாதம் தோறும் EMI கட்டி வாழ்ந்து கொண்டியிருகின்றோம்.
மற்றவர்கள் கை தட்ட வாழபோகிறோமா? மற்றவர்களிடம் கை கட்டி நிற்கபோகிறோமா? அல்லது துணிச்சலுடன் தொழில் செய்து மற்றவர்களையும் இந்த சமூகத்தையும் வாழ வைக்க போகிறோமா? முடிவு நம் கையில்.
நோக்கம்: நம் நகரத்தார்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் வியாபார நுணுக்கங்களை கற்று தேர்ந்த வள்ளுநர்களை வைத்து நமது புதிய தலைமுறைக்கு தொழில் தொடங்க உதவும் உக்திகளையும், ஏற்கனவே வியாபாரம் செய்து கொண்டு இருப்பவர்களுடைய வியாபாரம் மென்மேலும் பெருகும் வண்ணம் இந்த பெட்டியடி உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
Vision : To create a forum that impacts, empowers and resets Thanavanigar’s identity.
Mission : We create good opportunities to Unite and develop business for Nagarathar community through out the universe and to lead a life like a king in our business as a reflection of our forefathers..!